tamilnadu

img

பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க, அந்நிறுவனங்களின் வரி குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் பி.சி. மோடி மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இது தொடர்பான அறிவிக்கையை மத்திய வருவாய் துறை கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இது எல்லை கடந்த வரி ஏய்ப்பை தடுக்க உதவும். இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளும். இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் அதன் நிறுவனங்களை செயல்படுத்தினால், அவை அந்நாட்டில் வரி குறித்த விவரங்களை இந்தியாவிலும் தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும்.

இது தொடர்பான சிபிசி அறிக்கையில் நிறுவனத்தின் வருமானம், செலுத்தப்பட்ட வரி, பன்னாட்டு நிறுவனங்களா என்பது குறித்த விவரமும் இதில் இடம்பெறும். இந்தப் பட்டியலில் குழும நிறுவனங்கள் விவரம், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செயல்படும் நிறுவனங்களின் விவரம், நிறுவனங்களின் பிரதான தொழில் உள்ளிட்ட விவரங்களும் இருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்கள் ஆண்டுக்கு 75 கோடி யூரோ அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் சிபிசி தாக்கல் செய்ய வேண்டும். இந்திய மதிப்பில் ரூ.5,500 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் சிபிசி தாக்கல் செய்ய வேண்டும். இரு நாடுகளும் பரஸ்பரம் இந்த சிபிசி தகவலை பகிர்ந்துகொள்ளும். இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வது தவிர்க்கப்படும்.


;